வெறிச்சோடிய எட்டயபுரம் ஆட்டுச்சந்தை - ரூ. 6 கோடி வர்த்தகம் ரூ. 40 லட்சமாக சரிவு... கரணம் என்ன?
நிருபர்
March 21, 2026
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட புகழ்பெற்ற எட்டயபுரம் வாராந்திர ஆட்டுச்சந்தை, தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக இந்த ஆண்டு கடும் சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு ரூ. 6 கோடிக்கு நடைபெற்ற விற்பனை,

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட புகழ்பெற்ற எட்டயபுரம் வாராந்திர ஆட்டுச்சந்தை, தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக இந்த ஆண்டு கடும் சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு ரூ. 6 கோடிக்கு நடைபெற்ற விற்பனை, இந்த முறை வெறும் ரூ. 40 லட்சத்துடன் முடிவடைந்தது வியாபாரிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கமாக ரம்ஜான் போன்ற பண்டிகை காலங்களில் ரூ. 5 கோடி முதல் ரூ. 8 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். ஆனால், இந்த வாரம் அது லட்சங்களில் சுருங்கியுள்ளது. தேர்தல் விதிமுறைகளின்படி ரூ. 50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்களின்றி ரொக்கம் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதே இந்த சரிவுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. அண்டை மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சோதனைகளுக்கு அஞ்சி வராததால் சந்தை நேற்று களைையிழந்து காணப்பட்டது.

தென் மாவட்டங்களின் மிகப்பெரிய ஆட்டுச்சந்தையான எட்டயபுரத்தில் சனிக்கிழமை தோறும் நடைபெறும் வர்த்தகம், உள்ளூர் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கால்நடை வளர்ப்போர் மற்றும் இடைத்தரகர்கள் பெரும்பாலும் ரொக்கப் பணத்தையே நம்பியிருப்பவர்கள். முறையான ஆவணங்கள் கையாளத் தெரியாத எளிய தொழிலாளர்கள், பறக்கும் படையினரின் பறிமுதல் நடவடிக்கைக்கு அஞ்சி சந்தைக்கு வருவதைத் தவிர்த்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் சமயத்தில் இங்கு வியாபாரம் களைகட்டும். ஆனால் இந்த ஆண்டு தேர்தல் கெடுபிடிகளால் வெளியூர் வியாபாரிகள் வராதது எங்களை நிலைகுலையச் செய்துள்ளது, என உள்ளூர் வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நேற்று நடைபெற்ற சிறப்புச் சந்தை ஏமாற்றமளித்தாலும், இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதால் உள்ளூர் அளவில் விற்பனை சற்று உயரக்கூடும் என வியாபாரிகள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். இருந்தபோதிலும், தேர்தல் காலம் முடியும் வரை இந்த மந்தநிலை நீடிக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.