<p><b>துறையூர் அருகே டியூசன் படிக்க வந்த பத்தாம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.</b></p><p>திருச்சி மாவட்டம், துறையூர் அருகே வலையபட்டியைச் சேர்ந்த தேவி ( 40 ), துறையூர் அரசு உதவி பெறும் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிகிறார். தற்போது சத்திரப்பட்டியில் தங்கி, பள்ளி மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வருகிறார்.</p><p>அவரிடம் டியூசன் படிக்க வந்த பத்தாம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவனுக்கு ஏப்ரல் 27ஆம் தேதி தேவி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை அறிந்த மாணவனின் பெற்றோர் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.&nbsp;</p><p>இது குறித்து குழந்தைகள் நலக்குழு மற்றும் மகளிர் போலீசார் விசாரித்தனர். இதனை அடுத்து போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்த போலீசார் தேவியை நேற்று கைது செய்தனர்.</p>