தூத்துக்குடி மாநகராட்சிக்குப்பட்ட சில பகுதிகளில்  செப்.27ம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ வெளியிட்ட செய்திக் குறிப்பு :

தூத்துக்குடி மாநகராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் கலியாவூர் தலைமை நீரேற்று நிலையத்தில் கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பகுதிக்கு வரும் மின்சார பாதையான கொம்பு கார நத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால்

வருகின்ற 27. 09. 2022 செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது. எனவே  பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தெரிவிக்கப்படுகிறது.