புரட்டாசி மாத மகாளய அமாவாசையயை முன்னிட்டு, எட்டையபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் ஏழை எளிய முதியோர்களுக்கு உணவு வழங்கினார்.

நாம் இந்த உலகிற்கு வர முக்கிய காரணமாக இருந்த நம் முன்னோர்களை ஒரு போதும் மறக்கக் கூடாது. நமது வாழ்நாளில் அவசியம் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்று, பிதருக்களுக்கு செய்ய வேண்டிய காரியங்கள்.

அமாவாசை தர்ப்பணத்தை பொறுத்தவரை, மாதம் மாதம் வரும் அமாவாசையில், தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

மகாளய அமாவாசை தினத்தில் எறும்பு, காகம், நாய், பூனை, பசு மற்றும் அந்தணர்களுக்கு உணவளித்தால் கடவுளின் ஆசியும், முன்னோர்களின் ஆசியும் ஒரு சேர கிடைக்கும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அந்த வகையில், மகாளய அமாவாசையயை முன்னிட்டு, எட்டையபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் ஏழை எளிய முதியோர்களுக்கு உணவு வழங்கினார்.