தூத்துக்குடியில் மகனை கொலை செய்த வழக்கில் தந்தை உட்பட 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது
நிருபர்
July 20, 2022
தூத்துக்குடியில் மகனை கொலை செய்த வழக்கில் தந்தை உட்பட 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது தூத்துக்குடி செய்திகள் Thoothukudi news local news லோக்கல் நியூஸ் online news online tamil news தமிழ் செய்திகள் தமிழ் நியூஸ்

தூத்துக்குடியில் மகனை கொலை செய்த வழக்கில் தந்தை உட்பட 3 பேர் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடந்த 21.06.2022 அன்று மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி மணிநகர் பகுதியில் வைத்து ஓட்டப்பிடாரம், கவர்னகிரி பகுதியை சேர்ந்த தமிழழகன் மகன் காசிராஜன் (36) என்பவரை குடும்ப பிரச்சினை காரணமாக கொலை செய்த வழக்கில், மேற்படி காசிராஜனின் தந்தை தமிழழகன் (56), அவரது சகோதரரான தூத்துக்குடி கரிகாலம் காலனியை சேர்ந்த கடல்ராஜா (45), இவரது மகன் அரவிந்த் (19) மற்றும் தூத்துக்குடி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த ஜெயராஜ் மகன் காசித்துரை (31) ஆகிய 4 பேரையும் மத்தியபாகம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

மேற்படி இவ்வழக்கின் முக்கிய நபர்களான தமிழழகன், கடல்ராஜா மற்றும் அரவிந்த் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் அய்யப்பன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.

மேற்படி காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ் ஓட்டப்பிடாரம் கவர்னகிரி பகுதியை சேர்ந்த காசி மகன்களான 1) தமிழழகன், தூத்துக்குடி கரிகாலம் காலனியை சேர்ந்த 2) கடல்ராஜா மற்றும் கடல்ராஜா மகன் 3) அரவிந்த் (19) ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் அய்யப்பன் மேற்படி 3 பேரையும் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.

இந்த ஆண்டு இதுவரை போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 34 பேர் உட்பட 143 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.