தூத்துக்குடியில் திருமணமான இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை
நிருபர்
January 18, 2024
தூத்துக்குடியில் திருமணமான இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

தூத்துக்குடியில் திருமணம் ஆகி ஒரு ஆண்டே ஆன நிலையில், இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்தது குறித்து தென்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தூத்துக்குடி எப்சிஐ குடோன், இந்திராநகர் பகுதியைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து. கூலி தொழிலாளியான இவரது மனைவி சிவ பார்வதி ( 24 ) . திருமணமாகி ஓராண்டே ஆன நிலையில் நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த தென்பாகம் போலீசார், சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர்.