<p><b>எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் 1டன்&nbsp; ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.</b></p><p>தூத்துக்குடி மாவட்ட காவல்&nbsp; கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்&nbsp; உத்தரவுப்படி விளாத்திகுளம் காவல் துணை&nbsp; கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையிலான தனிப்படையினர் இன்று (10.04.2022) எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழவாசல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அங்கு&nbsp; &nbsp;சந்தேகத்திற்கிடமான முறையில் சிலர் மூட்டைகளில் ஏதோ வாங்கி வைத்துக் கொண்டிருந்தனர்.</p><p>அப்போது காவலர்களை கண்டதும் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். காவலர்கள் அங்கு சென்று பார்க்கும் போது&nbsp; 1 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பதும், அவற்றை சட்டவிரோதமாக கடத்துவதும் கண்டுபிடிக்கப்பட்டது.</p><p>உடனே போலீசார் மேற்படி&nbsp; &nbsp;சுமார் 1டன் ரேசன் அரிசி&nbsp; மூட்டைகளையும் பறிமுதல் செய்து, தப்பிச் சென்றவர்கள் யார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>