• vilasalnews@gmail.com

தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் மார்ச் 1ம் தேதி மஹா சிவராத்திரி திருவிழா- சற்குரு சீனிவாச சித்தர் அழைப்பு!

  • Share on

தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் மார்ச் 1ம் தேதி மஹா சிவராத்திரி திருவிழா நடக்க இருப்பதாக சற்குரு சீனிவாச சித்தர் அழைப்பு விடுத்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் மார்ச் 1ம் தேதி மஹா சிவராத்திரி திருவிழா சிறப்பு வழிபாடுகள் மற்றும் நகைச்சுவை பட்டிமன்றம் உள்ளிட்ட ஆன்மிக நிகழ்வுகளுடன் கோலாகலமாக நடைபெற இருபதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே பக்தர்கள் திரளாக பங்கேற்றிடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரிலுள்ள ஸ்ரீசித்தர் பீடத்தில் தென்தமிழகத்திலேயே வேறு எங்கும் இல்லாத தனிச்சிறப்பாக குருபகவான் குருமகாலிங்கேஸ்வராக தனி சந்தியில் இங்கு மட்டுமே எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். 

ஆன்மிக சிறப்புபெற்ற குரு மகாலிங்கேஸ்வரருக்கு ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி விழா சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் வெகு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான மஹா சிவராத்திரி விழா மார்ச் 1ம் தேதி(செவ்வாய்கிழமை)  கொண்டாடப்படுகிறது.

மார்ச் 1ம் தேதி காலை 10மணிக்கு மஹா கணபதி, நவக்கிரக ஹோமம், கோ பூஜை, மஹாலெட்சுமி ஹோமத்துடன் மஹா சிவராத்திரி விழா துவங்குகிறது. மாலை 6மணிக்கு நவக்கிர பூஜை, லலிதா சகஸ்ர நாமம், மஹா பூஜை, தீபாரதனையும், இரவு 9மணிக்கு மஹா சிவராத்திரி வழிபாடு பூஜைகளும், மஹா பூர்ணாகுதி, அபிஷேக அலங்கார தீபாரதனைகளும் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் கோலாகலமாக நடைபெறுகிறது. 

சிறப்பு விருந்தினராக மலேசியா கடாரம் டத்தோ செந்திநாதன் பங்கேற்கிறார். இரவு 10மணிக்கு ''பெண்களுக்கு ஆண்கள் ஹீரோவா..? இல்லை ஜீரோவா..?'' என்ற தலைப்பில் சின்னத்திரை புகழ் பேராசிரியர் செபாஸ்டின் தலைமையிலான குழுவினரின் நகைச்சுவை வழக்காடு மன்றம் நடைபெறுகிறது.

இரவு 12மணிக்கு மஹாஅபிஷேகம், தமிழ்மறையில் தேவார திருவாசக பாராயணமும், தொடர்ந்து அதிகாலை 2மணிக்கு சதுர்வேத பாராயணமும், அதிகாலை 4மணிக்கு அபிஷேக அலங்கார தீபாரதனை மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதலுடன் மஹா சிவராத்திரி விழா நிறைவடைகிறது.

இவ்விழாவில் பங்கேற்று ''ஓம் நமச்சிவாய'' ஸ்லோகம் அதிகளவில் எழுதுபவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும். இவ்விழாவினைத்தொடர்ந்து 2ம் தேதி(புதன்கிழமை) சர்வ அமாவாசை மஹா வழிபாடு நடைபெறுகிறது.

மஹா சிவராத்திரி விழாவில் சிவபக்தர்கள், ஆன்மீக அன்பர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்று குருமகாலிங்கேஸ்வரரின் பேரருளை பெற்றுச்செல்லுமாறு சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் கேட்டுக்கொண்டுள்ளார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் விழாக்குழுவினர், மகளிரணியினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

  • Share on

தூத்துக்குடி திருவிக நகர் சக்திபீடத்தில் விவசாயம் வளம்பெற 504 பெண்கள் இளநீர் அபிஷேகம் செய்து வழிபாடு!

திருச்செந்தூா் கோயிலில் வருஷாபிஷேகம்

  • Share on