• vilasalnews@gmail.com

சனி பெயர்ச்சி 2026: விருச்சிக ராசிக்கு ஜாக்பாட்... இனி தொட்டதெல்லாம் துலங்கும் பொற்காலம்!

  • Share on

ஜோதிட சாஸ்திரத்தில் 'மந்தன்' என்று அழைக்கப்படும் சனி பகவான், தற்போது கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். "சனி கொடுத்தால் எவர் தடுப்பார்" என்ற பழமொழிக்கு ஏற்ப, இந்த இடப்பெயர்ச்சி விருச்சிக ராசியினருக்குப் பல சாதகமான மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது. கடந்த காலங்களில் சந்தித்த இன்னல்கள் நீங்கி, இனி வரும் காலம் ஏற்றம் தரும் காலமாக அமையவுள்ளது.


இதுவரை உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் இருந்து 'அர்த்தாஷ்டம சனியாக பல நெருக்கடிகளைக் கொடுத்து வந்த சனி பகவான், இப்போது 5-ம் இடமான பஞ்சம ஸ்தானத்திற்கு நுழைகிறார். 5-ம் இடம் என்பது புத்திர பாக்கியம், பூர்வ புண்ணியம் மற்றும் புத்திசாலித்தனத்தைக் குறிக்கும் இடமாகும். இதன் மூலம் மன அழுத்தம் குறைந்து, தடைபட்ட காரியங்கள் இனி வேகம் எடுக்கும்.


கடந்த காலங்களில் தொழிலில் இருந்த மந்த நிலை மற்றும் சங்கடங்கள் முழுமையாக நீங்கும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகள் தேடி வரும். ஜூன் மாதத்திற்குப் பிறகு உங்கள் ராசிக்கு 2 மற்றும் 5-ம் அதிபதியான குரு பகவான், 9-ம் இடத்தில் (பாக்கிய ஸ்தானம்) உச்சம் பெற்று உங்கள் ராசியைப் பார்க்கிறார். இதனால் பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். ஆடை, ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வீண் வதந்திகளில் சிக்காமல் உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் உயர்வு நிச்சயம்.


நீண்ட நாட்களாகக் குழந்தை பாக்கியத்திற்காகக் காத்திருப்பவர்களுக்கு இக்காலகட்டத்தில் நல்ல செய்தி தேடி வரும். பிள்ளைகளின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இருந்த தடைகள் அகலும். பெற்றோர் மற்றும் பெரியோர்களின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. தந்தை மற்றும் தாய் வழி உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகளைத் தவிர்த்து, விட்டுக்கொடுத்துச் செல்வது குடும்ப அமைதியைக் காக்கும். பயணங்களின் போது நிதானம் தேவை. வாகனப் பராமரிப்பில் அலட்சியம் காட்ட வேண்டாம்.கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனைகளைச் சரியாகப் பின்பற்ற வேண்டும். மன அழுத்தத்தைத் தவிர்க்க தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சி செய்வது அவசியம்.


இந்த சனிப்பெயர்ச்சியின் தாக்கத்திலிருந்து விடுபட்டு, நற்பலன்களைப் பெற, தினமும் அபிராமி அந்தாதியில் உள்ள 40, 59, 75 ஆகிய பாடல்களைப் பாராயணம் செய்வது மிகுந்த நன்மையைத் தரும். குடும்ப ஒற்றுமைக்கு 90‍வது பாடலைப் படிக்கலாம். செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமானை வழிபடுவதும், சுப்பிரமணிய புஜங்கம் கேட்பதும் மனவலிமையைத் தரும். வாய்ப்பு கிடைக்கும்போது வைத்தீஸ்வரன் கோயில் சென்று வழிபடுவது வினைகளைத் தீர்க்கும். குலதெய்வத்தின் மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரிப்பது அனைத்துத் தடைகளையும் தகர்க்கும். இந்தச் சனிப்பெயர்ச்சி விருச்சிக ராசியினருக்குப் போராட்டங்களைக் குறைத்து, வெற்றிகளைத் தேடித்தரும் ஒரு பாலமாக அமையும். ஜூன் மாதத்திற்குப் பிறகு குருவின் பார்வையால் உங்கள் செல்வாக்கு சமூகத்தில் பன்மடங்கு உயரும்.


மேற்கூறிய பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்கள் மாறுபடலாம்.

  • Share on

2025 சனிப்பெயர்ச்சி : மேஷம் ராசிக்கு ஏழரை சனி ஆரம்பம்.. நல்லதா? கெட்டதா?

  • Share on