• vilasalnews@gmail.com

திருச்செந்தூரில் இன்று தைப்பூசத் திருவிழா - பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

  • Share on

திருச்செந்தூரில் இன்று நடைபெறும் தைப்பூசத் திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கோவிலில் இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடக்கிறது. தொடர்ந்து 8.30 மணி அளவில் சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. அதனை தொடர்ந்து 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், தீபாராதனை நடைபெறும். அதேவேளையில் சுவாமி சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

பின்னர் மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனை தொடர்ந்து 5.30 மணி அளவில் யாகசாலையில் இருந்து சுவாமி அலைவாயுகந்த பெருமான் எழுந்தருளி கோவில் பிரகாரங்களில் வலம் வந்து அருள் பாலிக்கிறார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அமலில் உள்ளதால் கடந்த 15-ம் தேதியிலிருந்து இன்று 18ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை.

எனவே, தைப்பூச நிகழ்ச்சிகள் அனைத்தும் ஆகம விதிகளின்படி கோவில் வளாகத்தின் உள்ளேயே நடக்கிறது.

  • Share on

தூத்துக்குடி : ஆன்மிக இயக்கம் சார்பில் 36ம் ஆண்டு பொங்கல் சமுதாயப் பணி - 1,200 பேருக்கு உதவி!

தூத்துக்குடி திருவிக நகர் சக்திபீடத்தில் விவசாயம் வளம்பெற 504 பெண்கள் இளநீர் அபிஷேகம் செய்து வழிபாடு!

  • Share on