• vilasalnews@gmail.com

நடைப்பயிற்சியின் போது நாம் முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டியவை என்னென்ன?

  • Share on

நடைப் பயிற்சி மேற்கொள்ளும் போது, செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவைகள் குறித்து விவரிக்கிறது இந்த பதிவு.

நாம் வீட்டில் இருந்து பணி செய்யவேண்டிய இடத்துக்கு பல கிலோமீட்டர் தொலைவு நடந்து செல்லவேண்டிய நிலைமை இப்போது யாருக்கும் இருந்ததில்லை.

வீட்டு வாசலுக்கும், அலுவலக வாசலுக்கும் போக்குவரத்துப் புரியும் சொகுசு வாகனங்கள், அலுங்காமல் குலுங்காமல் நம்மைக் கொண்டு சேர்க்கும் பணியை வெகு சிறப்பாகச் வாகனங்கள் செய்கின்றன. இப்படி உடல் உழைப்புக்கு வாய்ப்பே இல்லாதவர்கள், தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்யவேண்டியது அவசியம்.

நடை நம்மை பல நோய்களிலிருந்து காக்கிறது செலவில்லாத எளிய வழி கம்ப்யூட்டரின் ஆதிக்கம் சூழ்ந்த இந்த காலகட்டத்தில் உடலுழைப்பு என்றாலே உடற்பயிற்சியும் நடைபயிற்சியும் தான் என்று மாறிவிட்டது.

சிறிதளவு வியர்த்து விட்டாலும் நாம் பதறி போகிறோம் அதனால் குளிர்சாதன பெட்டியை (AC) நோக்கி நகர்ந்து அதன் பரிசாக பல்வேறு விதமான நோய்களை பெறுகிறோம்.

தினமும் காலை 7 மணிக்கு உள் மாலை 6 மணிக்கு மேல் ஏதேனும் ஒரு வேளை மட்டும் நடைப்பயிற்சி மேற்கொண்டால் போதும் நாம் நோயின் தாக்கத்திற்கு ஆளாக மாட்டோம்.

நடைப் பயிற்சி மேற்கொள்ளும் போது செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவை போன்றவற்றை கவனிக்கத் தவறுகிறோம்

செய்ய வேண்டியவை:

இயற்கையான சூழலில் தினமும் கட்டாயம் 30 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

நடைப்பயிற்சியின் போது அதற்கு ஏற்றவாறு காலுறை காலணி மற்றும் மேல் உடைகளை அணிந்து கொள்ள வேண்டும். மேலும் ஒரு குழுவாக சேர்ந்து மேற்கொள்வது சிறந்தது.

கைகளை பக்கவாட்டில் முன்னும் பின்னுமாக அசைத்து நடக்கவேண்டும். கால் விரலில் அழுத்தம் கொடுத்து காலை தூக்கி மீண்டும் தரையில் காலை வைக்கும் போது குதிகாலை பயன்படுத்த வேண்டும்.

நடக்கும் போது வயிறு மற்றும் இடுப்புப் பகுதியை நகர்த்தி உடல் நேராக இருக்கும்படி வைத்து நடக்க வேண்டும்

செய்யக்கூடாதவை:

வெயில் அதிகம் இருக்கும் நேரத்தில் நடக்கக்கூடாது. நடக்கும்போது குனிந்து நடக்காமல் நிமிர்ந்து நடக்க வேண்டும். வாயால் மூச்சு விடாமல் மூக்கால் மூச்சு விட வேண்டும் கைகளில் எதையும் தூக்கிக்கொண்டு, பிடித்துக்கொண்டு, அழுத்திக்கொண்டு, நடைபயிற்சி மேற்கொள்ள கூடாது.

மெதுவாக வேகமாக என மாற்றி மாற்றி நடைபயிற்சி மேற்கொள்ள கூடாது. நடைப்பயிற்சி முடிந்த பிறகு உடனடியாக உடற்பயிற்சியோ அல்லது கடினமான வேலைகளையோ செய்யக்கூடாது. இப்படி தொடர்ந்து நாம் செய்து வந்தால்  இதயத்துடிப்பு அதிகரிக்கும்.

தொடர்ந்து 30 நிமிடங்கள் நடப்பதால் 120 முதல் 170 கலோரி குறையும். உடலின் நெகிழ்வுத் தன்மை மேம்படும். மூட்டு மற்றும் தசை வலுப்படுத்தும். உடல் சமநிலை அடைய உதவுவதுடன்,நடையை சீர்படுத்தும், உடலை கட்டுக்கோப்பாக வைக்க உதவும், பசியை தூண்டும், ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவும்.

  • Share on

தேநீர் பருகுவதால் ஏற்படும் நன்மைகள்

நீங்க ஆவி பிடிக்கும் போது இந்த 5 பொருளை போட மறந்துடாதீங்க! இப்படி ஆவி புடிச்சா எந்தக் கிருமியும் பயந்து ஓடியே போய்விடும்!

  • Share on