உத்தரகண்டில் கொரோனா தொற்றில்  இருந்து மீண்டு வந்தவர் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது :

மியூ கோமை கோசிஸ் என்னும் கருப்பு பூஞ்சை மிகவும் அபாயகரமான அறியவகை பூஞ்சை. இந்த பூஞ்சை தாக்குவதால் தலைவலி, காய்ச்சல், கண்களில் வலி, மூக்கடைப்பு, பார்வை குறைபாடு போன்ற அறிகுறிகள் உண்டாகும். இந்த பூஞ்சை பெரும்பாலும் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் தாக்கியுள்ளது.

உத்தரகண்டில் இதுவரை 15 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எய்ம்ஸ் மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட நிலையில் கருப்பு பூஞ்சையால் உயிர் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது என எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனாவில்  இருந்து மீண்டவர்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.