தூத்துக்குடி வடக்கு ரதவீதி முத்தாரம்மன் கோவில் கொடை விழா : திருச்சிற்றம்பலம் ஏற்பாட்டில் 4 ஆயிரம் பேருக்கு பிரமாண்ட அன்னதானம்!
நிருபர்
May 12, 2026
தூத்துக்குடி வடக்கு ரதவீதி முத்தாரம்மன் கோவில் கொடை விழா : திருச்சிற்றம்பலம் ஏற்பாட்டில் 4 ஆயிரம் பேருக்கு பிரமாண்ட அன்னதானம்!

தூத்துக்குடி வடக்கு ரதவீதியில் அமைந்துள்ள அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் கொடை விழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த மே 8-ம் தேதி கால்நாட்டு வைபவத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று (மே 12) மதியம் 12.30 மணியளவில் தூத்துக்குடி ஹரிஸ்மா கோல்டு பைனான்ஸ் அதிபர் திருச்சிற்றம்பலம் ஏற்பாட்டில், சுமார் 4,000 பேருக்கு பிரமாண்ட அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வினை தூத்துக்குடி மாவட்ட முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சுதாகர் தொடங்கி வைத்தார். இதில் தொழிலதிபர் டைகர் சிவா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் கோவில் கமிட்டியினர் என பலரும் கலந்து கொண்டனர். திருச்சிற்றம்பலம் ஏற்பாட்டில் கடந்த ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்த அன்னதான விழா நடத்தப்பட்டு வருகிறது.

கொடை விழாவை முன்னிட்டு இன்று காலை முதல் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன்படி காலை 7 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் கும்பபூஜையும், காலை 8 மணி திருஞான சம்பந்த மூர்த்தி மடத்திலிருந்து பால்குடம் ஊர்வலம் புறப்படுதல், காலை 10.30 மணி அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகம், மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை மற்றும் கஞ்சி வார்த்தல் நடைபெற்றது.

மேலும், இன்று மாலை 5 மணிக்கு மாவிளக்கு பூஜையும், இரவு 8 மணிக்கு பொங்கலிடுதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. நள்ளிரவு 12 மணிக்குச் சிறப்பு படைப்பு தீபாராதனை நடைபெறுகிறது.

அதே போல, நாளை (மே 13) காலை அம்மன் பித்தளை சப்பரத்தில் வீதி உலா வருதல் மற்றும் இரவு 10 மணிக்கு அம்மன் பச்சை சாத்தி எழுந்தருளி சிவன் கோயில் முன்பாகக் காட்சி தருதல், நாளை மறுநாள் ( மே 14 ) காலை 8. 30 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, மே 19 ஆம் தேதி இரவு 7 மணிக்கு பைரவர் பூஜையுடன் கொடை விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளைத் திருக்கோவில் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.