தமிழக அரசியல் கட்சியின் நாளிதழ் வெளியீட்டாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை!
நிருபர்
July 06, 2022
தமிழக அரசியல் கட்சியின் நாளிதழ் வெளியீட்டாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை!
<p><b>முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு நெருக்கமானவரான சந்திரசேகரின் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</b></p><p>கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு நெருக்கமானவர். இவர் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மாவின் வெளியீட்டாளராக உள்ளார்.</p><p>இவரது வீட்டில் வருமான வரித் துறையினர் தற்போது திடீர் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த சோதனையில் 5 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளார்கள். அது போல் சந்திரசேகரின் தந்தை வீட்டிலும் 6 அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.</p><p>இந்த சோதனையில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அதனை ஒரு குழு அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளதாகவும், மற்றொரு அதிகாரிகள் குழு தொடர்ந்து சோதனை நடத்திவருவதாவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p>