5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிந்த நிலையில், தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளன.

தமிழகம் உள்பட 5 மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல் திருவிழா கடந்த மார்ச் மாதம் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புடன் தொடங்கியது. சுமார் ஒன்றரை மாதங்களாக நீடித்து வந்த இந்த ஜனநாயகத் திருவிழா இன்று மேற்கு வங்கத்தின் இறுதிக்கட்டத் தேர்தலுடன் நிறைவடைந்தது.

இந்தநிலையில், இன்று மாலை 6.30 மணியில் இருந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தொடர்ச்சியாக வெளியாக தொடங்கி உள்ளது. பொதுவாக வாக்குப்பதிவு நடைபெறும் நாளில், வாக்களித்துவிட்டு வெளியே வரும் வாக்காளர்களிடம் அவர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்ற அடிப்படையில் எடுக்கப்படும் ஆய்வே 'எக்ஸிட் போல்' எனப்படும். இது தேர்தலுக்கு முன் எடுக்கப்படும் கணிப்புகளைக் காட்டிலும் அதிகத் துல்லியம் வாய்ந்தது ஆகும்.

எனவே வாக்காளர்களின் மனநிலை, குறிப்பிட்ட தொகுதிகளில் நிலவிய மாற்றங்கள் மற்றும் வாக்கு சதவீத உயர்வு யாருக்குப் பாதகம் அல்லது சாதகம் என்பதைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் என நம்பப்படுகிறது.

ஏற்கனவே அனல் பறந்த தமிழக சட்டசபை தேர்தல் களம், இந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் என்ன இருக்கும் என்பதை அறிய மக்களிடையே ஆர்வம் அதிகளவில் உள்ளது.

இந்த நிலையில், தற்போது தேர்தலுக்கு பிந்தைய வெளியான கருத்துக்கணிப்புகள் படி,

Peoples Pulse

திமுக + : 125 - 145

அதிமுக + : 65 - 80

தவெக : 18 - 24

மற்றவை : 2 - 6

News18

திமுக + : 125 - 145

அதிமுக + : 65 - 80

தவெக : 13 - 18

நாதக : 5 - 8

மற்றவை : 2 - 6

Today's Chanakya

திமுக + : 145 - 160

அதிமுக + : 50 - 65

தவெக : 13 - 18

நாதக : 5 - 8

Spick Media - Idam Valam

திமுக + : 89 - 101

அதிமுக + : 124 - 127

தவெக : 4 - 6

நாதக : 0