தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் பதிவான மொத்த வாக்குகள் மற்றும் ஆண்-பெண் வாரியான விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில் அனைத்துத் தொகுதிகளிலும் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் மொத்த ஆண் வாக்காளர்கள் 100484 பேரும், பெண் வாக்காளர்கள் 104482 பேரும், மற்றவர்கள் 16 பேரும், மொத்த வாக்காளர்கள் 204982 உள்ள நிலையில், ஆண்கள் 82815 பேரும், பெண்கள் 89728 பேரும், மற்றவர் 12 பேரும் என மொத்தம் 172555 வாக்குகள் பதிவாகியுள்ளது.

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் மொத்த ஆண் வாக்காளர்கள் 121695 பேரும், பெண் வாக்காளர்கள் 128826 பேரும், மற்றவர்கள் 65 பேரும், மொத்த வாக்காளர்கள் 250587 உள்ள நிலையில், ஆண்கள் 97716 பேரும், பெண்கள் 105014 பேரும், மற்றவர் 40 பேரும் என மொத்தம் 202770 வாக்குகள் பதிவாகியுள்ளது.

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் மொத்த ஆண் வாக்காளர்கள் 113407 பேரும், பெண் வாக்காளர்கள் 119496 பேரும், மற்றவர்கள் 30 பேரும், மொத்த வாக்காளர்கள் 232933 உள்ள நிலையில், ஆண்கள் 87352 பேரும், பெண்கள் 96313 பேரும், மற்றவர் 20 பேரும் என மொத்தம் 183685 வாக்குகள் பதிவாகியுள்ளது.

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் மொத்த ஆண் வாக்காளர்கள் 105728 பேரும், பெண் வாக்காளர்கள் 108535 பேரும், மற்றவர்கள் 5 பேரும், மொத்த வாக்காளர்கள் 214268 உள்ள நிலையில், ஆண்கள் 84316 பேரும், பெண்கள் 89159 பேரும், மற்றவர் 4 பேரும் என மொத்தம் 173479 வாக்குகள் பதிவாகியுள்ளது.

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் மொத்த ஆண் வாக்காளர்கள் 118710 பேரும், பெண் வாக்காளர்கள் 124990 பேரும், மற்றவர்கள் 56 பேரும், மொத்த வாக்காளர்கள் 243756 உள்ள நிலையில், ஆண்கள் 93195 பேரும், பெண்கள் 99964 பேரும், மற்றவர் 23 பேரும் என மொத்தம் 193182 வாக்குகள் பதிவாகியுள்ளது.

கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் மொத்த ஆண் வாக்காளர்கள் 116980 பேரும், பெண் வாக்காளர்கள் 124651 பேரும், மற்றவர்கள் 29 பேரும், மொத்த வாக்காளர்கள் 241660 உள்ள நிலையில், ஆண்கள் 90024 பேரும், பெண்கள் 101771 பேரும், மற்றவர் 12 பேரும் என மொத்தம் 191807 வாக்குகள் பதிவாகியுள்ளது.