ஆணி பலகை, தலைகவசத்தில் யோகா செய்து அசத்திய சகோதரர்கள்
நிருபர்
June 21, 2021
ஆணிப் பலகை, தலைகவசத்தில் யோகா செய்து அசத்திய சகோதரர்கள்

ஆணி பலகையில் யோகாசனம் மற்றும் ஹெல்மெட், கண்ணாடி டம்ளர், நாற்காலி ஆகியவற்றில் உடலை வருத்தி புதுமையான முறையில் யோகாசனம் செய்து அசத்திய சகோதரர்கள்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் அசாருதீன் (20) சல்மான் கான் (18). இவர்கள் சிறுவயதிலிருந்தே பல்வேறு யோகாசனங்கள் மூலம் சாதனை புரிந்து வருகின்றனர்.

இவர்கள் ஆண்டுதோறும் ஜூன் 21-ஆம் தேதி உலக யோகா தினத்தை முன்னிட்டு பல்வேறு யோகாசனம் செய்து வருகின்றனர். இந்த ஆண்டு யோகா சகோதரர்கள் இருவரும் 21 நிமிடங்களில் 21 யோகா ஆசனங்கள் செய்து அசத்தி உள்ளனர்.

ஆணி பலகையில் யோகாசனம் மற்றும் ஹெல்மெட், கண்ணாடி டம்ளர், நாற்காலி ஆகியவற்றில் உடலை வருத்தி புதுமையான முறையில் 21 ஆசனங்கள் செய்து சாதனை புரிந்துள்ளனர்.

மேலும் , இயற்கை உணவே உடலுக்கு ஆரோக்கியமானது. ஆகையால் காய்கறிகள், பழங்கள் மற்றும் இயற்கை உணவுகளான பருப்புகள், கம்பு, கேழ்வரகு ஆகியவற்றை உண்ண வேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக பழங்கள், காய்கள், தானியங்கள் போன்றவற்றை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.