தூத்துக்குடியில் பரபரப்பு : சோபாவிற்கு அடியில் பதுங்கல்... அடுத்து நடந்தது என்ன?
நிருபர்
April 24, 2026
தூத்துக்குடி அருகே மறவன்மடம் பகுதியில் வீட்டின் சோபாவிற்கு அடியில் பதுங்கியிருந்த 6 அடி நீள சாரைப்பாம்பை சிப்காட் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாகப் பிடித்தனர்.

தூத்துக்குடி அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சாரைப்பாம்பை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தூத்துக்குடி அடுத்த மறவன்மடம், திரவியபுரம் 3-வது தெருவைச் சேர்ந்தவர் தனசேகரன். இன்று இவரது வீட்டின் வரவேற்பு அறைக்குள் திடீரென பாம்பு ஒன்று புகுந்தது. சோபாவின் அடியில் பாம்பு பதுங்கியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக வீட்டை விட்டு வெளியேறினர்.

இதுகுறித்து உடனடியாக சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சுமார் அரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, சோபாவின் அடியில் மறைந்திருந்த 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை வீரர்கள் எவ்வித காயமுமின்றி லாவகமாகப் பிடித்தனர்.

மீட்கப்பட்ட பாம்பு, பின்னர் பாதுகாப்பான முறையில் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பாம்பு பிடிபட்டதைத் தொடர்ந்து அந்தத் தெருவில் வசிக்கும் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். இது குறித்து தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் கூறுகையில்:

"தற்போது கோடை காலம் மற்றும் மழைக்கால மாற்றங்களால் பாம்புகள் குடியிருப்புக்குள் நுழைய வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் வீட்டின் உட்புறத்தையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். தேவையற்ற கழிவுப் பொருட்களைச் சேமித்து வைக்க வேண்டாம்," என வேண்டுகோள் விடுத்தார்.