நான் என்ன செய்தேன் என்பது  தூத்துக்குடி மக்களுக்கு தெரியும். அதிமுக வேட்பாளருக்கு தெரியவில்லை என்றால் அவர் கோமாவில் இருந்திருப்பார் என, அதிமுக வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியனின் விமர்சனத்திற்கு திமுக வேட்பாளார் கீதா ஜீவன் பதிலடி கொடுத்துள்ளார்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கீதாஜீவன் நேற்று (04.04.2026 - சனிக்கிழமை) தூத்துக்குடி மாநகரம் - 53 மற்றும் 54வது வார்டுகளுக்கு உட்பட்ட  தோப்புத் தெரு, வடக்குத்தெரு, கீழத்தெரு, முஸ்லிம் தெரு, காளியம்மன் கோவில் தெரு, அய்யன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து தன்னை வெற்றி பெறச் செய்யுமாறு திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது, 2 முறை அமைச்சர், எம்எல்ஏவாக  இருந்து கீதாஜீவன் நீங்கள் செய்த சாதனை என்ன? நீங்க செய்த ஒரே சாதனை அழுகின முட்டை போட்டது தான். அதுக்கு வேற ஒரு விளக்கம். முட்டை மேல மை உள்ளே போனதாம் என அதிமுக வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியன் தனக்கு எதிராக செய்த விமர்சனத்திற்கு, நான் என்ன செய்தேன் என்பது  தூத்துக்குடி மக்களுக்கு தெரியும். அதிமுக வேட்பாளருக்கு தெரியவில்லை என்றால் அவர் கோமாவில் இருந்திருப்பார் என திமுக வேட்பாளர் கீதா ஜீவன் காட்டமாக பதில் கொடுத்தார்.

இந்நிகழ்வின் போது ஏ.பி.சி.வி. சண்முகம், சகாயராஜ், தனலட்சுமி, தயாள லிங்கம், சுரேஷ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின், மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் அன்பழகன், பகுதிச் செயலாளர்கள் மேகநாதன், ஜெயக்குமார், மாநகராட்சி மண்டல தலைவர் பாலகுருசாமி, மாமன்ற உறுப்பினர் விஜயகுமார், வட்டச் செயலாளர் மனோகரன், மாநகர மகளிர் அணி ஜெயக்கனி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.