மாட்டு வண்டி... ஏர் கலப்பை... கோவில்பட்டியில் சீறிய நாம் தமிழர் : வழக்கறிஞர் பாண்டியின் வித்தியாசமான வேட்புமனுத் தாக்கல்!
நிருபர்
March 30, 2026
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் இன்று நடைபெற்ற வேட்புமனுத் தாக்கல் நிகழ்வு, வழக்கமான அரசியல் ஆரவாரங்களிலிருந்து விலகி, பாரம்பரிய முறைப்படி நடைபெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் இன்று நடைபெற்ற வேட்புமனுத் தாக்கல் நிகழ்வு, வழக்கமான அரசியல் ஆரவாரங்களிலிருந்து விலகி, பாரம்பரிய முறைப்படி நடைபெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

வழக்கமாக கார்கள் மற்றும் சொகுசு வாகனங்கள் புடைசூழ வரும் வேட்பாளர்களுக்கு மத்தியில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் பாண்டி முற்றிலும் மாறுபட்ட ஒரு வியூகத்தைக் கையாண்டார்.

லெட்சுமி மில் மேம்பாலத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தின் முன்பு விவசாயிகள் ஏர் கலப்பைகளை ஏந்திச் செல்ல, அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் வேட்பாளர் பாண்டி பயணித்தார். கையில் வேல் ஏந்தியபடியும் சென்றார். மேளம், தாளம் முழங்க தொண்டர்கள் உற்சாக முழக்கமிட்டபடி பின்னால் அணிவகுத்தனர். இந்த ஊர்வலம் கோவில்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்தை அடைந்ததும், தேர்தல் அதிகாரிடம் பாண்டி தனது வேட்புமனுவை முறையாகத் தாக்கல் செய்தார்.

மனுத் தாக்கலுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த வழக்கறிஞர் பாண்டி:-

கோவில்பட்டியில் அடிப்படை வசதிகள் கூட இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. தரமான கல்வி, குடிநீர், சாலை வசதி மற்றும் மருத்துவ வசதிக்காக மக்கள் இன்றும் ஏங்குகிறார்கள். இதுவரை ஆட்சியில் இருந்த திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் இந்தத் தொகுதிக்கு உருப்படியாக எதையும் செய்யவில்லை.

மேலும், திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி வரவேண்டும் என்பதே மக்களின் விருப்பம். இந்த முறை மக்கள் மாற்றத்தைத் தேர்வு செய்வார்கள், நாம் தமிழர் கட்சி உறுதியாக வெற்றி பெறும் என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

ஏற்கனவே நட்சத்திரத் தொகுதியாகப் பார்க்கப்படும் கோவில்பட்டியில், நாம் தமிழர் கட்சியின் இந்தத் பாரம்பரிய முன்னெடுப்பு மற்ற கட்சி வேட்பாளர்களிடையே சிறு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. விவசாயத்தையும் மண்ணையும் முன்னிறுத்தி பாண்டி நடத்திய இந்த ஊர்வலம் தூத்துக்குடி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசு பொருளாகி உள்ளது .