விளாத்திகுளத்தில் மீண்டும் களம் இறங்கும் மார்கண்டேயன்!
நிருபர்
March 28, 2026
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு திமுக சார்பில் கடந்த 2021 தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மார்கண்டேயனுக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி வேட்புமனு தாக்கல் வரும் 30 ஆம் தேதி தொடங்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த நிலையில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக உள்ளனர். இந்த நிலையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்டார். அதில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு திமுக சார்பில் கடந்த 2021 தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மார்கண்டேயனுக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வரதராஜன் - ராஜலட்சுமி ஆகியோரின் மகனாக மார்கண்டேயன் பிஏ.,பில்., பயின்றுள்ளார். அவருக்கு ரெபேக்காள் அனிட்டா என்ற மனைவியும், சட்ட கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வரும் அக் ஷய் மற்றும் ஆறாம் வகுப்பு படிக்கும் நிரஞ்சன் ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.

2002 - 2006 மற்றும் 2006 - 2011ஆம் ஆண்டுகளில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராகவும், 2011 - 2016 மற்றும் 2021 - 2026 ஆம் ஆண்டுகளில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.