அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தற்போது வெளியிட்டுள்ளார். இதில், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சரும் மாநில வர்த்தக அணி செயலாளருமா சி.த. செல்லப்பாண்டியன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதிமுக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. 23 பேர் கொண்ட அந்தப் பட்டியலில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளின் பெயர் இடம் பெற்றிருந்தது.

இந்நிலையில், 2ம் கட்டமாக 127 தொகுதிகளுக்கு இன்று வேட்பாளர்களை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சரும் மாநில வர்த்தக அணி செயலாளருமா சி.த. செல்லப்பாண்டியன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

14.01.1957 அன்று விவசாயி சி.தங்கராஜ் நாடார்  என்பவருக்கு மகனாக பிறந்த சி.த.செல்லப்பாண்டியன், M.A படித்துள்ளார். அவருக்கு சி.த.செ.இந்திரா என்ற மனைவியும், சி.த.செ.ராஜாசிங்,  சி.த.செ.ஜெபசிங் ஆகிய இரு மகன்களும், எஸ்தர் தங்கமணி என்ற ஒரு மகளும் உள்ளனர்.

2001 ஆம் ஆண்டு தி.மு.க மாவட்ட செயலாளராக இருந்து அ.தி.மு.க.வில் சேர்ந்த சி.த.செல்லப்பாண்டியன், 2006 தூத்துக்குடி மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர், 2008 மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர், 2011 தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர், 2011 அண்ணா தொழிற்சங்கம் மாநில துணைச் செயலாளர், 2011 தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளர், 2016 தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வி, 2016 தூத்துக்குடி மாவட்ட செயலாளர், 2016 தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர், 2017 அதிமுக அமைப்பு செயலாளர், 2020 திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி வேளாண் ஒழுங்குமுறை விற்பனை குழுத்தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து, 2024 முதல் தற்போது வர்த்தக அணிச் செயலாளராக உள்ளார்.