தூத்துக்குடி மாவட்டத்தில் அதிமுகவின் வெற்றி முகத்திற்கான தொகுதி!
நிருபர்
March 26, 2026
2026 சட்டமன்றத் தேர்தல் தமிழகத்தில் சூடு பிடித்துள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் எந்த கட்சி வேட்பாளர் வெற்றி பெறுவார் என்ற கணிப்புகளும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தல் தமிழகத்தில் சூடு பிடித்துள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் எந்த கட்சி வேட்பாளர் வெற்றி பெறுவார் என்ற கணிப்புகளும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் ( தனி ) உள்ளிட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

இதில், கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஊர்வசி அமிர்தராஜ் 76,843 வாக்குகளும், அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் 59,471 வாக்குகளும் பெற்றார். இதனையடுத்து 17,372 வாக்குகள் வித்தியாசத்தில் ஊர்வசி அமிர்தராஜ் வெற்றிபெற்றார்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் வெற்றியை தீர்மானிக்கும் சமூகங்களில் ஒன்றாக முக்குலத்தோர் சமூக வாக்குகள் இருப்பதாக கருதப்படும் சூழலில், அச்சமூகங்களின் சில வாக்குகள் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக போட்டியிட்ட ஏரல் ரமேஷ் 10,203 வாக்குகளை பெறுவதற்கான சூழலை ஏற்படுத்தி விட்டது. இதுவே அதிமுக வேட்பாளர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவு ஏற்பட்டு தோல்வியை தழுவ ஒரு காரணமாக அமைந்தது.

ஆனால், தற்போது 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இணைத்திருப்பது ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் அக்கூட்டணிக்காக வாக்கு சதவீதத்தை அதிகரிக்கலாம் என நம்பப்படுகிறது.

அதாவது கடந்த 2021 தேர்தலில் தனித்தனியாக அதிமுக பெற்ற வாக்குகளையும் அமமுக பெற்ற வாக்குகளையும் தற்போது கூட்டி கணக்கிடும் போது 69674 வாக்குகள் வருகிறது. ஆகவே, அதிமுக அமமுக கூட்டணிக்கும் காங்கிரசுக்கு இடையே வெற்றி பெற்ற வாக்குகள் வித்தியாசம் என்பது வெறும் 7169 தான்.

கடந்த 2021 தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் மீது தொகுதி மக்கள் பாரம்பரிய குடும்பத்தை சார்ந்தவர், செல்வந்தர், இளைஞர் எனவே இவர் வெற்றி பெற்றால் தொகுதியை வேறு விதமாக வளர்ச்சி படுத்துவார் என்ற ஒருவித எதிர்பார்ப்போடு மக்கள் வாக்குகளை செலுத்தி வெற்றி பெற வைத்தார்கள். ஆனால், அவரோ சென்னையில் இருந்து ஸ்ரீவைகுண்டத்திற்கு விருந்தினர் போல மாதத்திற்கு ஒரிரு நாட்கள் வந்து, எம்எல்ஏ தொகுதி நிதி ஒதுக்கீடு மூலம் நடைபெறும் பணிகளின் நிகழ்ச்சிகளில் மட்டும் தலையை காட்டி விட்டு சென்னை திரும்பி செல்வதை பொதுமக்கள் மட்டும் அல்ல சொந்த கட்சியினரே கண்டு அதிர்ச்சி அடைந்து அவர் மீது கடும் அதிர்ப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்தநிலையில், மீண்டும் 2026 தேர்தலில் போட்டியிட ஊர்வசி அமிர்தராஜ் தலைமையிடம் காய் நகர்த்தி வருகிறாராம். அதேவேளையில், திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகளில் 15 தொகுதிகளில் புது முகங்களை களம் இறக்கும் முடிவில் ராகுல்காந்தி இருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் மீண்டும் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் ஊர்வசி அமிர்தராஜ் போட்டியிடக்கூடிய வாய்ப்பு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், அவர் மீண்டும் போட்டியிட்டால் வெற்றிக்கான சாத்தியக்கூறுகள் மிக குறைவே என சொல்கிறது தொகுதி கள நிலவரம்.

மேலும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியின் வெற்றியை தீர்மானிகக்கும் சமூகங்களில் நாடார் சமூகம் விளங்கி வருவதால், திமுக கூட்டணியில் அந்ததொகுதியை சமத்துவ மக்கள் கழகம் நிறுவனத்தலைவர் எர்ணாவூர் நாராயணனன் போட்டியிட முயற்சித்து வருகிறாராம்.

அதே போல், கோவில்பட்டியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்ற கடம்பூர் ராஜூ, 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளராக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டு 4 வது முறையாக கோவில்பட்டி தொகுதியில் களம் இறங்குகிறார். அவருக்கு எதிராக திமுகவோ, திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலோ வேட்பாளர் களம் இறக்கப்பட்டால் கடம்பூர் ராஜூவின் வெற்றி எளிதாக இருக்கக்கூடும். அதே வேளையில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் வைகோவோ, விநாயகம் ரமேஷ் வேட்பாளராக களம் இறக்கப்பட்டால் போட்டி கடுமையாக இருக்கும். ஆனாலும், கடம்பூர் ராஜூவிற்கான வெற்றி வாய்ப்பு சவாலாக இருக்க வாய்ப்பு இல்லை.

தற்போதைய கள நிலவரப்படி தூத்துக்குடி மாவட்ட தொகுதிகளில் கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய இரண்டு தொகுதிகள் அதிமுகவின் வெற்றி முகமாக அறியப்படுகிறது.