தூத்துக்குடியில் உரிய ஆவணமில்லாத ரூ.2 லட்சம் பறிமுதல்!
நிருபர்
March 14, 2021
தூத்துக்குடியில் உரிய ஆவணமில்லாத ரூ.2 லட்சம் பறிமுதல்!

தூத்துக்குடி அருகே உரிய ஆவணமின்றி வாகனத்தில் எடுத்துச்சென்ற 2 லட்சம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் முறைகேடுகளை தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்புகுழுவினர் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று தூத்துக்குடி அடுத்த மாப்பிள்ளையூரணி விலக்கு பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனையிட்டனர். சோதனையின் போது, காரில் 2 லட்சத்து ஆயிரம் ரூபாய் பணம் எடுத்துச்செல்வது தெரியவந்தது. இதுகுறித்து வாகனத்தில் வந்த நபரிடம் அதிகாரிகள் விசாரித்துபோது, பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது.

இதனை அடுத்து அவரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும், பணத்திற்கான ஆவணங்களை அளித்துவிட்டு, அதனை பெற்றுச்செல்லும்படி வாகன ஓட்டியிடம் அறிவுறுத்தி அனுப்பினர்.