<p><b>ஓட்டப்பிடாரம் அருகே மரத்தில் பைக் மோதியதில் படுகாயம் அடைந்த&nbsp; வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.&nbsp;</b><br></p><p>தூத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சி, இந்திரா நகரைச் சேர்ந்தவர் கந்தசாமி மகன் செல்வக்குமார் (28).&nbsp; இவர் ஓட்டப்பிடாரத்தில் இருந்து குறுக்கு சாலைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். மேல லட்சுமிபுரம் அருகே செல்லும் போது திடீரென நிலைதடுமாறி அருகில் இருந்த மரத்தில் பைக் மோதியது. </p><p>இவ்விபத்தில் பலத்த காயம் அடைந்த செல்வகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் காவல் ஆய்வாளர் முத்துராமன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.</p>