கிடைத்தது ரகசிய தகவல்... தூத்துக்குடியில் சிக்கிய கடத்தல் கும்பல்!
நிருபர்
December 29, 2025
தூத்துக்குடியில் சட்டவிரோதமாக பீடி இலைகளை சரக்கு வாகனத்தில் கடத்தி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டு, 2 டன் பீடி இலைகள், சரக்கு வாகனம் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடியில் சட்டவிரோதமாக பீடி இலைகளை சரக்கு வாகனத்தில் கடத்தி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டு, 2 டன் பீடி இலைகள், சரக்கு வாகனம் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி புதியம்புத்தூர் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் மாரியப்பன் மற்றும் போலீசார் இன்று (29.12.2025) புதூர்பாண்டியபுரம் அருகே ரோந்து பணி மேற்கொண்ட போது அங்கு சந்தேகத்திற்கிடமாக சரக்கு வாகனம் மற்றும் இருசக்கர வாகனத்துடன் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் தூத்துக்குடி குரும்பூரைச் சேர்ந்த காலபெருமாள் மகன் சுரேஷ்குமார் (42), குறுகாட்டூர் பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து மகன் மகேஸ்வரன் (30) மற்றும் குரும்பூர் அங்கமங்கலம் பகுதியைச் சேர்ந்த சுப்பையா மகன் வடிவேல் முருகன் (42) ஆகியோர் என்பதும் அவர்கள் சட்டவிரோதமாக சரக்கு வாகனத்தில் பீடி இலை பண்டல்கள் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

உடனடியாக போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த தடை செய்யப்பட்ட சுமார் 2 டன் பீடி இலைகள், கடத்தலுக்கு பயன் படுத்தப்பட்ட சரக்கு (மினி லாரி) வாகனம் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுகுறித்து புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.