எட்டையபுரம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட அதிமுகவினர்!
நிருபர்
June 05, 2025
எட்டையபுரத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி அதிமுகவினர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனு அளித்தனர்

எட்டையபுரத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி அதிமுகவினர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனு அளித்தனர்.

எட்டையபுரம் பேரூராட்சி பகுதிகளில் நடைபெறும் பொதுமக்களின் அடிப்படை தேவை பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருவதாகவும், இதனால் பணிகளை துரிதப்படுத்தி விரைந்து முடிக்கவும், பொதுமக்களுக்கான குடிநீர் விநியோகமானது 12 நாட்களுக்கு ஒருமுறை தான் வழங்கப்படுவதாகவும், இதனால் பொதுமக்களுக்கு போதுமான குடிநீர் கிடைக்காமல் குடிநீர் தட்டுப்பாடு நிலவி அவதிப்படுவதால், கால தாமதமின்றி குடிநீர் வழங்கிட வலியுறுத்தியும்,

அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ எம்எல்ஏ ஆலோசனையின் பேரில், எட்டையபுரம் நகரச் செயலாளர் ராஜகுமார் தலைமையில், அதிமுகவினர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் கோரிக்கை தொடர்பான மனுவினை பேரூராட்சி அலுவலகத்தில் அளித்தனர்.