குருவார்பட்டியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம்: எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்!
நிருபர்
March 04, 2026
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், குருவார்பட்டி கிராமத்தில் சுமார் ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

இவ்விழாவில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் கலந்துகொண்டு, புதிய கட்டிடத்தைத் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, ஒன்றிய அவைத்தலைவர் தர்மராஜ், மற்றும் ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் எஸ்.டி.பி. செந்தில்வேல், கிளைச் செயலாளர்கள் தினகரன், ஆதிலிங்கம், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.