தூத்துக்குடியில் சாலையில் சென்று கொண்டிருந்த போது, மாடு குறுக்கே வந்ததால் பைக் விபத்துக்குள்ளாகி இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி திரேஸ்வரம் மாதவன் நாயர் காலனியைச் சேர்ந்தவர் திருமுருகன் மலைச்சாமி மகன் பாலமுருகன் (38). மீனவரான இவர், தூத்துக்குடி புதிய துறைமுகம் மதுரை பைபாஸ் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது குறுக்கே வந்த மாடு இவரது பைக் மீது மோதியது.

இதில் பைக்கில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்த பால முருகனை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக நேற்று இரவு இறந்தார். இந்த சம்பவம் குறித்து  தெர்மல்நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.