தூத்துக்குடியில் 94 பணியிடங்கள் இருக்கு... விண்ணப்பிக்கலாம்!
நிருபர்
March 20, 2025
அரசு பேருந்துகளில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்ப இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தூத்துக்குடியில் 94 பணியிடங்கள் இருப்பதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. .

அரசு பேருந்துகளில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்ப இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தூத்துக்குடியில் 94 பணியிடங்கள் இருப்பதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 10 ஆம் வகுப்பு மற்றும் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருப்பவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு அரசு 8 போக்குவரத்து கழகங்களில் 25 மண்டலங்களில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கு அடிப்படை தகுதிகளை பூர்த்தி செய்யும் நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வரவேற்கப்படுகின்றன.

இதில் 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான வெளியான அறிவிப்பில், தூத்துக்குடி மண்டலத்தில் 94 இடங்கள் உள்ளது குறிப்பிடதக்கது.

பதவியின் பெயர்

ஓட்டுநர் உடன் நடத்துநர்

பணிக்காலியிட எண்ணிக்கை  (மொத்தம் 3274)

குறைந்தபட்ச வயது

01.07.2025 அன்று 24 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது

(01.07.2025 அன்று) பொது வகுப்பினர் (OC) 40 வயது பூர்த்தியாகாமலும், பிற்படுத்தப்பட்டவர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர், சீர் மரவினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர் (BC/MBC/DNC/SC/ST)45 வயது பூர்த்தியாகாமலும் இருத்தல் வேண்டும். முன்னாள் இராணுவத்தினருக்கு பொது வகுப்பினர் (OC) 50 வயது பூர்த்தியாகாமலும் மற்றும் இதர வகுப்பினர் (BC/MBC/DNC/SC/ST) 55 வயது பூர்த்தியாகாமலும் இருத்தல் வேண்டும்.

கல்வித் தகுதி

பத்தாம் வகுப்பு (SSLC) தேர்ச்சி மற்றும் தமிழில் பேசவும், படிக்கவும், எழுதவும் தெரிந்திருத்தல் அவசியம்.

முக்கிய தகுதிகள்

செல்லத்தக்க கனரக வாகன ஓட்டுநர், உரிமம் மற்றும் குறைந்தபட்சம் 18 மாதங்கள் கனரக வாகனம் ஓட்டிய அனுபவம், முதலுதவிச் சான்று, பொதுப் பணி வில்லை மற்றும் செல்லத்தக்க நடத்துநர் உரிமம் 01.01.2025-க்கு முன்னர் பெற்றதாக இருத்தல் வேண்டும்.

உயரம் மற்றும் எடை

உயரம் குறைந்தபட்சம் 160 செ.மீ. எடை குறைந்தபட்சம் 50 கிலோகிராம்.

உடல் தகுதி

1. தெளிவான குறைபாடுகளற்ற (Clear Eyesight) கண் பார்வை பெற்றிருத்தல் வேண்டும்.

2. எவ்விதமான உடல் அங்க குறைபாடுகள் (Physical Deformity) அற்றவராக இருத்தல் வேண்டும்.

கூடுதல் தகவல்

சாலை போக்குவரத்து நிறுவனம் மூலம் ஓட்டுநர் பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச வயது 24 மற்றும் 18 மாதங்கள் முன் அனுபவம் ஆகிய நிபந்தனைகள் பொருந்தாது.

மேலே கண்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து வங்கி சேவை கட்டணம் நீங்கலாக (SC / ST) பிரிவினர் ரூ.590/- (18% GST உட்பட) கட்டணமாகவும் வங்கி சேவை கட்டணம் நீங்கலாக இதர பிரிவினர் ரூ.1180/- (18% GST உட்பட) கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் முறையே எழுத்து, தேர்வு செய்முறைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம் எந்த காரணத்தை முன்னிட்டும் திரும்ப வழங்கப்படமாட்டாது.

விண்ணப்பதாரர்கள் எழுத்து / செய்முறை / நேர்முகத் தேர்விற்கு வருவதற்கான பயணச்செலவு மற்றும் இதர செலவு தொகை ஏதும் வழங்கப்படமாட்டாது.

இந்நியமனம் தொடர்பாக நடத்தப்படும் எழுத்து / செய்முறை/ நேர்முகத் தேர்வு தொடர்பான அனைத்து விபரங்களையும் அறிய www.arasubus.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.

இணையதளம் மூலம் விண்ணப்ப படிவம் 21/03/2025 மதியம் 01.00 மணி முதல் 21/04/2025 மதியம் 01.00 மணி வரை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். அதன் பிறகு இணைப்பு முடக்கப்படும்.

இதர விபரங்கள் போக்குவரத்துக் கழக பொதுப்பணி விதிகள் மற்றும் அரசு விதிகளுக்கு உட்பட்டது, தகுதி பெறாதவர்களின் விண்ணப்பங்களை எவ்வித அறிவிப்புமின்றி நிராகரிக்க போக்குவரத்துக் கழகங்களுக்கு அதிகாரம் உண்டு.

சென்னை உயர்நீதிமன்ற W.P. No.20290 of 2012 நாள் 27.08.2014 மற்றும் W.A.No.. 1737 of 2014 நாள் 20.06.2019 வழக்கில் பிறப்பித்த உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின்படி இவ்வறிக்கை வெளியிடப்படுகிறது.

தேர்வு அனுமதிச்சீட்டு பதிவிறக்கம் மற்றும் தேர்வு நடைபெறும் இடங்கள் பற்றிய விபரங்கள் Www.arasubus.tn.gov.in என்ற இணையதளத்தில் அவ்வப்போது பதிவிடப்படும். எனவே விண்ணப்பதாரர்கள் இத்தளத்தை அவ்வப்போது காணுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்