பணம் பறிக்கும் சைபர் குற்ற கும்பல்... தூத்துக்குடி மக்களே உஷார்!
நிருபர்
March 19, 2025
பணம் பறிக்கும் சைபர் குற்ற கும்பல்... தூத்துக்குடி மக்களே உஷார்! Thoothukudi online news | Tuty News website | Today thoothukudi news | thoothukudi update | Thoothukudi | தூத்துக்குடி | தூத்துக்குடி செய்திகள் | இன்றைய தூத்துக்குடி செய்தி | தூத்துக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் பங்குசந்தை முதலீடு மற்றும் விமான நிலையத்தில் வேலை வாய்ப்பு என செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பி பணத்தை மோசடி செய்த சைபர் குற்ற வழக்குகளில் ரூபாய் 6,90,000 பணம் மீட்கப்பட்டு, அப்பணத்தை அதன் உரிமையாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒப்படைத்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் தனது வாட்ஸ் அப்பில் ஒரு லிங்கை அனுப்பி அதில் பங்குசந்தை இணையதளத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று வந்த செய்தியை நம்பி அந்த இணையதளத்தில் ரூபாய் 22,82,000/- முதலீடு செய்து, பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட நபர் NCRPல் அளித்த புகாரின் அடிப்படையில் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு மேற்படி பாதிக்கப்பட்ட நபரின் மோசடி செய்யப்பட்ட பணத்தில் ரூபாய் 5,40,000 ஐ மீட்டனர்.

அதே போன்று தூத்துக்குடியை சேர்ந்த பெண் ஒருவருக்கு விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக அவரது செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியை நம்பி அந்த பெண் மேற்படி மர்மநபர்களுக்கு ரூபாய் 16,61,038 பணத்தை அனுப்பி பின்னர் தான் மோசடி செய்யப்பட்டது குறித்து NCRPல் அளித்த புகாரின் அடிப்படையில் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு மேற்படி பாதிக்கப்பட்ட நபரின் மோசடி செய்யப்பட்ட பணத்தில் ரூபாய் 1,50,000/- ஐ மீட்டனர். மேலும் மேற்படி வழக்குகள் குறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி வழக்குகளில் மீட்கப்பட்ட மொத்தம் ரூபாய் 6,90,000 பணத்தை அதன் உரிமையாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஒப்படைத்தார்.

மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம், டெலிகிராம் போன்றவற்றின் மூலம் வரும் போலியான விளம்பரங்களை நம்பி அதில் வரும் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்றும், தேவையில்லாத செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும், இளைஞர்கள் பெண்கள் ஆகியோர் இதுபோன்ற போலியான விளம்பரங்களை தவிர்த்து சைபர் குற்றங்களிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார்.