தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் இந்திரா காலனி சேர்ந்தவர் முனீஸ்வரன் ( 34 ). இவர் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று மாலை சிவகாசி சாத்தூர் சாலையில் மேட்டமலை அருகே டூவீலரில் சென்றபோது எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக மோதியதில் தூக்கி வீசப்பட்டார்.

இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். சாத்தூர் நகர் போலீசார் முனீஸ்வரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், நாமக்கலைச் சேர்ந்த லாரி டிரைவர் சதீஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்து போலீசர் விசாரணை நடத்தி வருகின்றனர்.