<p><b>தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் வருகிற 20ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது</b>.&nbsp;</p><p><br></p><p>தூத்துக்குடி மாநகரின் குடிநீர் விநியோக பாதையான வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம், கலியாவூர்&nbsp; மற்றும் கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலைய&nbsp; பகுதிகளில் ‌வரும் மின்சார பாதையான கொம்பு காரநத்தம் துணை மின் நிலையத்தில் வருகின்ற 20.11.2024 புதன் கிழமை அன்று&nbsp; மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை&nbsp; தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப் படுகிறது. ஆகவே,&nbsp; பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தெரிவித்துள்ளார்.</p>