<p><b>சாத்தான்குளம் சார் பதிவாளர் அலுவலரத்திற்கு இன்று ( வெள்ளிக்கிழமை ) அதிகாரிகள் தாமதமாக வந்ததால் பத்திர பதிவுக்கு வந்த மக்கள் வெகு நேரம் காத்திருக்க&nbsp; வேண்டிய நிலை ஏற்பட்டது.&nbsp;</b><br></p><p>சாத்தான்குளம் சார் பதிவாளர் அலுவலகம் புதியதாக கட்டப்பட்டு வருவதால் இட்டமொழி சாலையில் உள்ள வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், இன்று வெள்ளிக்கிழமை காலை பத்திரபதிவு&nbsp; உள்ளிட்ட இதர காரணங்களுக்காக&nbsp; &nbsp;பொதுமக்கள் பலர் வந்திருந்தனர்.&nbsp; ஆனால் சார் பதிவாளர் அலுவலகத்தில்&nbsp; உரிய அதிகாரிகள் வரவில்லை. இதனால் அதிகாரி&nbsp; வராததால் பத்திரபதிவு உள்ளிட்ட பணிகள் நடைபெறாததால் வந்திருந்த மக்களும் வெகு நேரம்&nbsp; காத்திருந்தனர். பகல் 12 மணி ஆகியும் அதிகாரிகள் வராததால் காத்திருந்த மக்கள் மேல் அதிகாரிகளுக்கு&nbsp; தொடர்பு கொண்டு விசாரித்தனர். அதன்பின் மேல்அதிகாரிகளின் உத்தரவின் பேரில் சாத்தான்குளம் சார் பதிவாளர் அலுவலகததிற்கு அதிகாரி சுமார் 1.30 மணிக்கு வந்ததாக கூறப்படுகிறது.</p><p>அதன்பின் பத்திரபதிவு உள்ளிட்ட பணிகள் தொடங்கி நடைபெற்றது. இதனால் நல்ல நேரத்தில்&nbsp; பத்திர பதிவு செய்ய வேண்டும் என காத்திருந்தவர்கள் ஏமாற்றமடைந்தனர். எனவே, சார் பதிவாளர் அலுவலக அதிகாரிகள் குறித்த நேரத்தில் அலுவலகத்திற்கு வந்து மக்களை காத்திருக்க வைக்காமல் பணிகளை முடித்து கொடுக்க வேண்டும்&nbsp; என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.&nbsp;</p>