<p><b>ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் கலைஞர் கருணாநிதியின் 6 ஆம் ஆண்டு&nbsp; நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் திருஉருவப்படத்திற்கு சண்முகையா எம்எல்ஏ மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.</b><br></p><p>மறைந்த திமுக தலைவரும்,&nbsp; முன்னாள் தமிழக&nbsp; முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் 6 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து, ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் பேருந்து நிலைய வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தகலைஞர் கருணாநிதியின் திருஉருவப்படத்திற்கு, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.&nbsp;</p><p>இந்நிகழ்ச்சியில், தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி, நகர செயலாளர் லிங்கராஜ், வர்த்தக அணி&nbsp; முத்துக்குமார், சிறுபான்மை அணி&nbsp; ஞானதுரை, மாவட்ட பிரதிநிதி ஜோசப், மோகன், நெசவாளர் அணி ஈசன், சுரேஷ், மாவட்ட இளைஞரணி தங்கத்துரை பாண்டியன், முன்னாள் கவுன்சிலர் சிவன், ஆதி திராவிடர் அணி கருப்பசாமி, பஞ்சாயத்து தலைவர் மாரிச்செல்வம், கிளைச் செயலாளர் சற்குண பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>