<p><b>தூத்துக்குடி மாதா கோவில் வந்த சிறுமி தவற விட்ட தங்க நகையை கண்டெடுத்து ஒப்படைத்த நபருக்கு காவல்துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.</b><br></p><p>தூத்துக்குடி&nbsp; கிருஷ்ணராஜபுரம்&nbsp; 6வது தெருவைச் சேர்ந்தவர் விவேக். இவரது மகள் ஹர்ஷா (9) அணிந்திருந்த 9 கிராம் டாலர் செயின் மாதா கோவில் அருகே தொலைந்து விட்டது. இதனை சண்முகபுரம் ஞானமைக்கேல் மகன் அந்தோணி (43) என்பவர் கண்டெடுத்து மாதா கோவில் புற காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.&nbsp;</p><p>பின்னர், சிறிது நேரம் கழித்து செயின் தொலைந்து விட்டதாக விவேக் புகார் கூறினரர். இதையடுத்து சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் விசாரணை நடத்தி நகையை உரியரிடம் ஒப்படைத்தார். கீழே கிடந்த நகையை ஒப்படைத்த அந்தோணியை காவல்துறையைினர் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.&nbsp;</p>