கொம்மடிக்கோட்டை ஸ்ரீ சங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்   நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 811 மனுக்கள் பெறப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம்  ஒன்றியம் கொம்மடிக்கோட்டை ,  நடுவக்குறிச்சி, அரசூர், தாமரைமொழி , ஆகிய ஊராட்சி பகுதி மக்களுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட  முகாம் சாத்தான்குளம் அருகே  கொம்மடிக்கோட்டை ஸ்ரீ சங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  வைத்து  சனிக்கிழமை  நடைபெற்றது.

முகாமுக்கு, மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமை உதவி திட்ட அலுவலர் முத்துச்சாமி தலைமை வகித்தார். ஊராட்சித் தலைவர்கள் ராஜபுனிதா, சபிதா, தினேஷ்ராஜசிங், சாந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   ஒன்றியக்குழு தலைவர் ஜெயபதி  முகாமை தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சுடலை வரவேற்றார்.  இதில் கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் அத்வைதானந்தம், இணை செயலர் காசியானந்தம், சாத்தான்குளம்  வட்டாட்சியர்  இசக்கிமுருகேஸ்வரி, சமுக பாதுகாப்பு திட்ட தனி  வட்டாட்சியர்  அற்புதமணி, கல்லூரி  முதல்வர் அருள்ராஜ் பொன்னுத்துரை, துணை முதல்வர் மகேஸ்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

இதில் 4 ஊராட்சி பகுதியைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு முகாமில் பங்கேற்ற அனைத்துதுறை அதிகாரிகளிடம் குறை மற்றும் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை,  உரிமைத்தொகை, இலவச வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை தொடர்பாக மனு அளித்தனர். இம்முகாமில் 811 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டது.

முகாமில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டாக்டர் சுவிட்லின்  தலைமையிலான நடமாடும் மருத்துவ குழுவினர் மருத்துவ முகாம் நடத்தினர். மக்களைத்தேடி திட்ட பணியாளர்கள் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, பொதுமக்களுக்கு பார்த்தனர். சுகாதார ஆய்வாளர்கள் கிறிஸ்டோபர் செல்வதாஸ், மந்திரராஜன், ஜெயபால் கொண்ட  குழுவினர் டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி அமைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.   வேளாண்மைத்துறை, தோட்டக்கலை துறை சார்பிலும் அரசு திட்டத்தை விளக்க  காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதனை  வட்டாட்சியர்  இசக்கிமுருகேஸவரி, ஒன்றிய ஆணையர் சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் சுடலை,  ஒன்றியக்குழு தலைவர்  ஜெயபதி பார்வையிட்டனர்.

இதில் தட்டார்மடம்  உதவி ஆய்வாளர் , பொன்னு முனியசாமி,  சுகாதார  மேற்பார்வையாளர் பால்ஆபிரகாம்,  ஊராட்சி செயலர்கள் அருணாதேவி, அருணாச்சலதுரை, ஆரோக்கியராஜ், துரைமுருகன் உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். ஒன்றிய  ஆணையர் சுரேஷ் நன்றி கூறினார்.