நான் என்ன கூறுகிறேனோ, அதையே முதலமைச்சர் செய்து வருகிறார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற தலைப்பில் மும்முரமாக மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று ( 5.2.2021 )  தூத்துக்குடி மாவட்டம் நட்டாத்தில் நடைபெற்ற "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:-

நீதிமன்றம் கூறிய போது, கடன்களை தள்ளுபடி செய்யவில்லை.திமுக கூறிய பின்பு, தற்போது பயிர் கடன்களை தள்ளுபடி செய்துள்ளார் முதல்வர் பழனிசாமி.

திமுக என்ன சொன்னதோ "நான் என்ன கூறுகிறேனோ, அதையே அப்படியே முதலமைச்சர் பழனிசாமி செய்து வருகிறார்". 7 பேர் விடுதலை விவகாரத்திலும், ஆளுநரை நாங்க சந்தித்த பின் தான், அவர் சந்தித்தார். பொய் நாடகங்களை நாள்தோறும் நடத்தி வருகிறார் முதலமைச்சர் பழனிசாமி.

திமுக ஆட்சியில் தமிழகம் முன்னிலையில் இருந்தது. ஆனால் இப்போது இந்த ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தமிழகம் பின்னோக்கி சென்று விட்டது.

ஸ்டாலின் செய்வார் என்ற நம்பிக்கையில் மக்கள் என்னிடம் மனுக்கள் கொடுக்கின்றனர். அதிமுக ஆட்சியில்  சாதனைகள் என்னவென்றால் ஊழலும், விலைவாசி உயர்வும் மட்டும்தான். இந்த ஆட்சியில் மருத்துவர்கள், செவிலியர்கள் புறக்கணிப்பட்டுளள்னர். முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் கடமை தவறி விட்டனர். அணைய போகும் அரசாக அதிமுக அரசு உள்ளது என்று மு.க. ஸ்டாலின் பேசினார்.