விளாத்திகுளம் உட்கோட்டம்  எட்டையபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட எட்டையபுரம் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பல்  தொழில்  நுட்பக் கல்லூரியில் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பு பற்றிய   விழிப்புணர்வு நிகழ்ச்சி  நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில்  விளாத்திகுளம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ்  கலந்து கொண்டு மாணவிகளுக்கு  சாலைபாதுகாப்பு மற்றும் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பு  பற்றிய அறிவுரைகள் வழங்கினார்கள். மேலும் காவலன் sos செயலி மற்றும் posco சட்டம் பற்றிய விவரங்களை விளக்கி  கூறினார்கள்.

இந்நிகழ்ச்சியில் எட்டையபுரம் காவல் நிலைய காவல் ஆய்வாளர்  கலா , உதவி ஆய்வாளர் பொன்ராஜ், கல்லூரி துறைத்தலைவர் அருணா வினோதினி மற்றும் மாணவிகள் கலந்து கொண்டார்கள்.