<p><b>கிராமப்புற மாணவிகளின் நலனையும், பொதுமக்களின் நலனையும் கருத்தில் கொண்டு உடன்குடி பெரியதாழை ஆகிய ஊர்களில் இருந்து சாத்தான்குளம் மகளிர் கல்லூரி வரை மகளிர்&nbsp; இலவச&nbsp; &nbsp;பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுத்ததற்கு&nbsp; &nbsp;திமுக மற்றும் பொதுமக்கள், மாணவிகள் சார்பிலும் கனிமொழி எம்பியிடம் நன்றியை தெரிவித்த சாத்தான்குளம் ஒன்றிய திமுக செயலாளர்,</b></p><p>சாத்தான்குளத்தில் இருந்து முதலூர்,&nbsp; பொத்தகாலன்விளை, போலையர்புரம், நடுவக்குறிச்சி, தட்டர்மடம் வழியாக உடன்குடிக்கு ஒரு மகளிர் இலவச பேருந்து வசதி செய்து கொடுத்தால் கொம்மடிக்கோட்டை ஸ்ரீசங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பிறைகுடியிருப்பு சிவந்தி மகளிர்&nbsp; கலை மற்றும்&nbsp; அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவிகள், பொதுமக்கள்&nbsp; மிகவும் பயன் அடைவார்கள். ஆகவே, உடன்குடியில் இருந்து பெரியதாழை செல்லும் பேருந்து தடம்&nbsp; எண்&nbsp; 62 எப் பேருந்தை காந்தி நகரில் இருந்து தட்டார்மடம் வரை சென்று வந்தால்&nbsp; இக்கல்லூரி மாணவிகள் மிகவும் பயன் அடைவார்கள்.</p><p>திசையன்விளையிலிருந்து தச்சன்விளை, கடக்குளம், கலியன்விளை, பனைவிளை, இடைச்சிவிளை, பூச்சிக்காடு விலக்கு வழியாக சாத்தான்குளம் மகளிர்&nbsp; கல்லூரி&nbsp; வரை புதிய பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுத்தால் கிராமப்புற&nbsp; மாணவிகள், பொது மக்கள் மிகவும் பயன் அடைவார்கள். ஆதலால் இந்த புதிய பேருந்து வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று கனிமொழி எம்பியிடம் சாத்தான்குளம் ஒன்றிய திமுக செயலர்&nbsp; பாலமுருகன் கோரிக்கை அளித்தார். மனுவை பெற்ற கனிமொழி எம்பி , நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பதாக உறுதி அளித்தார்.</p>