தூத்துக்குடியில் லிப்ட் கேட்டு கத்திமுனையில் பைக் பறிப்பு : 4 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!
நிருபர்
February 14, 2024
தூத்துக்குடியில் லிப்ட் கேட்டு கத்திமுனையில் பைக் பறிப்பு : 4 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!
<p><b>தூத்துக்குடியில் வாலிபரை கத்தியை காட்டி மிரட்டி பைக்கை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். </b><br></p><p>தூத்துக்குடி பிரையன்ட் நகர் 11வது தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் மாரிமுத்து (21). இவர் நேற்று மதியம் புதிய துறைமுகம் பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது திருச்செந்தூர் ரவுண்டான அருகே 4பேர் அவரை லிப்ட் கேட்டு பைக்கை நிறுத்தியுள்ளனர்.</p><p>அவர் பைக்கை நிறுத்தியதும் அந்த 4 பேர் கத்தியைக் காட்டி மிரட்டி மாரிமுத்துவிடம் இருந்த ரூ.2ஆயிரம் பணம் மற்றும் அவரது இருசக்கர வாகனத்தை பறித்துச் சென்றுவிட்டனர். இதுகுறித்து அவர் தெர்மல் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் ஆய்வாளர் செந்தில்குமார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார். </p>