கோவில்பட்டி அருகே மூதாட்டி உடலை நடுரோட்டில் வைத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு!
நிருபர்
January 11, 2024
கோவில்பட்டி அருகே மூதாட்டி உடலை நடுரோட்டில் வைத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு!
<p><b>கோவில்பட்டி அருகே மயானத்திற்கு பாதை இல்லை என்று கூறி சாலை நடுவே மூதாட்டி உடலை வைத்து கிராம மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.</b><br></p><p>தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே உள்ள சுப்பிரமணியபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் ஜம்புலிங்கபுரம். இந்த கிராமத்தினை சேர்ந்த முதியவர் தர்மராஜ், மூதாட்டி வள்ளியம்மாள் ஆகியோர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தனர்.</p><p>இந்நிலையில், அங்குள்ள மயானத்திற்கு கொண்டு செல்ல பாதை இல்லை என்றும், பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி மூதாட்டி வள்ளியம்மாள் உடலை கழுகுமலை - கயத்தாறு சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. </p>