இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு வருகின்ற 26.01.2024 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

தெற்கு மண்டல இந்திய விமான நிலைய ஆணையத்தால் Junior Assistant (Fire Service) – SRD- 73, Junior Assistant (Office)- 02, Senior Assistant (Electronics)- 25, Senior Assistant (Accounts)- 19 ஆகிய பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு வருகின்ற 26.01.2024 வரை www.aai.aero என்ற இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யலாம். வயது வரம்பு 18 முதல் 30 வரை ஆகும். OBC (Non-Creamy Layer) பிரிவினர் 33 வயது வரையிலும், SC/ ST பிரிவினர் 35 வயது வரையிலும், மாற்றுத்திறனாளி பிரிவினர் 40 வயது வரையிலும் விண்ணப்பம் செய்யலாம்.

எழுத்துத் தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இத்தேர்வு தொடர்பான கூடுதல் விவரங்களை www.aai.aero என்ற இணையதளத்தில் அறியலாம். Junior Assistant (Fire Service) – SRD பணியிடத்திற்கு 10-ம் வகுப்பு மற்றும் 3 வருடம் Diploma in Mechanical/ Automobile/ Fire படித்திருக்க வேண்டும் அல்லது 12-ம் வகுப்பு தேர்ச்சி (Regular Study) பெற்றிருக்க வேண்டும். Driving License கட்டாயம். இந்த பணியிடத்திற்கு முன்னாள் இராணுவத்தினர் மட்டும் விண்ணப்பிக்கலாம். Junior Assistant (Office) பணியிடத்திற்கு ஏதேனும் பட்டப்படிப்பு படித்து இருக்க வேண்டும்.

Senior Assistant (Electronics) பணியிடத்திற்கு Diploma in Electronics / Telecommunication / Radio Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் அதே பிரிவில் இரண்டு வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். Senior Assistant (Accounts) பணியிடத்திற்கு B.Com பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் Accounts /Finance பிரிவில் இரண்டு வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

இத்தேர்வுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.1000 (ஜி.எஸ்.டி உட்பட) ஆன்லைனில் செலுத்த வேண்டும். பெண்கள்/ எஸ்.சி / எஸ்.டி பிரிவினர்/ முன்னாள் இராணுவத்தினர்/ மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.