நடிகை நயன்தாரா மீது போலீசார் வழக்குப்பதிவு
நிருபர்
January 08, 2024
நடிகை நயன்தாரா மீது போலீசார் வழக்குப்பதிவு
<p><b>நடிகை நயன்தாராவின் 75-வது திரைப் படம், 'அன்னபூரணி'. ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக் குமார், ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்த இந்தப் படம் கடந்த டிசம்பர் 1ம் தேதி வெளியானது. இப்படத்தை அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். இந்தப் படம் சமீபத்தில் நெட்பிளிக்ஸ் தளத்திலும் வெளியானது</b>.<br></p><p>இதையடுத்து மும்பையை சேர்ந்த சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ்சோலங்கி என்பவர், அன்னபூரணி படம் மத உணர்வைப் புண்படுத்துவதாகவும் லவ்ஜிகாத்தை ஆதரிப்பதாகவும் கூறி, மும்பை எல்டி மார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.</p><p>இந்த நிலையில், அன்னபூரணி படத்தில் இந்து மத நம்பிக்கைகளை தவறாக காட்டியதாக அளித்த புகாரின் அடிப்படையில் நடிகை நயன்தாரா, நடிகர் ஜெய் உள்ளிட்டோர் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் பட தயாரிப்பாளர் ரவீந்திரன், ஜதின் சேத்தி, புனித் கோயங்கோ உள்ளிட்டோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.</p>