கோவில் உண்டியல் உடைப்பு - 2 பேர் கைது
நிருபர்
September 24, 2023
கயத்தாறு அருகே கோவில் உண்டியல் உடைப்பு தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
<p><b>கயத்தாறு அருகே கோவில் உண்டியல் உடைப்பு தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். </b></p><p>தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே சவலாப்பேரி கிராமத்தில் ஊருக்கு மேற்கே உள்ள மொட்டையச்சாமி கோவிலில் நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். அங்கிருந்த உண்டியலை உடைத்தனர். மேலும் அங்கிருந்த 13-க்கும் மேற்பட்ட வெள்ளி காப்புகள், வெள்ளி வளையல்கள் மற்றும் உண்டியல் பணத்தை திருடிச் சென்றனர். தொடர்ந்து கண்காணிப்பு கேமராவையும் உடைத்து நொறுக்கினர். இதுகுறித்து கோவில் தர்மகர்த்தா மொட்டையச்சாமி, கயத்தாறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.</p><p>புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி கோவில்பட்டி வள்ளுவர்நகரைச் சேர்ந்த காந்தாரி மகன் கனகராஜ் (வயது 30), கோவில்பட்டி புதுக்குளத்தை சேர்ந்த மாடசாமி மகன் மாரியப்பன் (40) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.</p>