பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தை இரண்டாம் நாள், உலக பிரசித்தி பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.

கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன், பல்வேறு கட்டுப்பாடுகளுடன், பலத்த பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன்  நடைபெறும் இந்த பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் துவக்கி வைத்தார்.

போட்டியில், முதலாவதாக கோவில்காளைகள் வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்தன. மகாலிங்கம் சுவாமி காளை, அய்யனார் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

ஜல்லிக்கட்டு போட்டியில் 800 காளைகளும் 651 மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்கின்றனர்.  காலை 8 மணிக்கு தொடங்கிய இப்போட்டி மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

இந்தப் போட்டியில் வெற்றிபெறும் காளைகளுக்கும் அவற்றின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் குவிக்கப்பட்டுள்ளது.

பார்வையாளர்களுக்கு இருபுறமும் வேலிகள் அமைத்து காளைகள் உள்ளே நுழையாமல் பாதுகாப்பு வசதிகள், கழிப்பறை வசதி, குடிநீர் வசதி என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில், சிறந்த காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு சிறப்பு பரிசாக கார் உள்ளிட்டவைகள் வழங்கப்பட உள்ளது.  இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.