தூத்துக்குடி துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
நிருபர்
February 02, 2023
தூத்துக்குடி துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
<p><b>தூத்துக்குடி துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இன்று காலை ஏற்றப்பட்டது.</b></p><p>வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி திங்கள்கிழமை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த காற்றழுத்த மண்டலமானது திரிகோணமலைக்கு அருகே 110 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.</p><p>இதன் காரணமாக வங்க கடலில் பலத்த காற்று வீசி வருவதால், தமிழக தென்கடலோர மீனவர்கள் கடலுக்குச் செல்ல கடந்த இரண்டு நாட்களாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை தூத்துக்குடி துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டது.</p>