தூத்துக்குடியில் தபால் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி
நிருபர்
August 06, 2022
தூத்துக்குடியில் தபால் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி தூத்துக்குடி செய்திகள் Thoothukudi news local news லோக்கல் நியூஸ் online news online tamil news தமிழ் செய்திகள் தமிழ் நியூஸ்
<p><b>தூத்துக்குடியில் தபால் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.</b></p><p>தூத்துக்குடி நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய அஞ்சல்துறை நாடு முழுவதும் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்கள் சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக அனைத்து இல்லங்களிலும் மூவர்ணக்கொடி என்ற தலைப்பில் தூத்துக்குடி அஞ்சல் துறை சார்பில் இன்று விழிப்புணர்வு பேரணி நடந்தது.</p><p>தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் உள்ள தலைமை அஞ்சலகத்தில் இருந்து புறப்பட்ட பேரணியை தூத்துக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பொன்னையா தொடங்கி வைத்தார். உதவிக்கோட்ட கண்காணிப்பாளர்கள் குமரன், வசந்தா சிந்துதேவி, உப கோட்ட ஆய்வாளர் சுப்பையா மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட அஞ்சல்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர். </p><p>இந்த பேரணி தாமோதரநகர், புதுக்கிராமம் மற்றும் சிவந்தாகுளம் சாலை வழியாக சென்று மீண்டும் தலைமை அஞ்சலகத்தில் நிறைவடைந்தது.</p>