தூத்துக்குடியில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் - அமைச்சர், மேயர் வழங்கினர்!
நிருபர்
July 27, 2022
தூத்துக்குடியில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் - அமைச்சர், மேயர் வழங்கினர்!
<p><b>தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. இலவச சீருடை, இலவச கைப்பை, இலவச புத்தகம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன</b>.</p><p>அதே போல, தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கொரோனோ வைரஸ் தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி மற்றும் மடிக்கணினி வழங்கப்படாமல் இருந்தது. தற்போது மாநிலம் முழுவதும் 2021 - 2022 கல்வி ஆண்டுக்கான விலையில்லா மிதிவண்டிகள் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.</p><p>இந்தநிலையில், இன்று தூத்துக்குடி திருச்சிலுவை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ( Holy Cross Girls Hr.Sec.School) , நடைபெற்ற விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.</p><p>இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, துணை மேயர் ஜெனிட்டா, தாசில்தார் செல்வகுமார், மற்றும் பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>