<p><b>ஓட்டப்பிடாரத்தில் பள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.&nbsp;</b></p><p>ஓட்டப்பிடாரம் வடக்குபரும்பூரை சேர்ந்த பேச்சிமுத்து மகன் கோபாலகிருஷ்ணன். வேன் டிரைவர். இவரது 2-வது மகன் கொம்பையா (வயது 15). இவர் பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று காலையில் பெற்றோர் மற்றும் மூத்த சகோதரர் வெளியே சென்றிருந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்துள்ளார். அவரது தாயார் தூத்துக்குடி சென்று விட்டு இரவில் வீட்டிற்கு வந்துள்ளார்.&nbsp;</p><p>அப்போது வீட்டின் கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது. வெகு நேரமாக கதவை தட்டியும் திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து திறந்து பார்த்தபோது கொம்பையா வீட்டின் பேன் மாட்டும் கம்பியில் சேலையால் தூக்கு மாட்டி இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.&nbsp;</p><p>அவரை மீட்டு, ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஒட்டப்பிடாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>